தோல்விகளைக் கண்டு தாம் ஒருபோதும் கவலைப்பட்டதோ, அச்சம் அடைந்ததோ இல்லை என்கிறார் பூஜா ஹெக்டே.
தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்காக நூறு விழுக்காடு உழைத்து, தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பல வெற்றி, தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் மனதில் எனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளேன். இதற்காக நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
“தற்போது என் கைவசம் ஐந்து படங்கள் உள்ளன. விஜய்யின் 69வது படம், சூர்யாவுடன் ஒரு படம், இந்தியில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடிக்கும் ‘தேவா’ படம் ஆகியவை எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என நம்புகிறேன்.
“மேலும், இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்கிறார் பூஜா ஹெக்டே.