தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான ‘டீசல்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார் அப்படத்தின் இயக்குநர் சண்முகம்.
முதலில் வசனகர்த்தா, பிறகு கதாசிரியர், அடுத்து இயக்குநர் எனத் திரையுலகில் படிப்படியாக முன்னேற்றம் கண்டவர் இவர்.
“’டீசல்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சேரன் அழைத்து ஒருமணி நேரம் பேசினார். இயக்குநர்கள் வசந்தபாலன், தங்கர்பச்சான், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் பாராட்டினர்.
“படத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் படத்தை உரிய நேரத்தில் வெளியிட முடியாமல் போனது,” என்று கூறியுள்ள சண்முகத்துக்கு, அஜித் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே இலக்காம்.

