கன்னடத்தில் முன்னணி நாயகியாக உள்ள ருக்மிணி வசந்த், தமிழில் அறிமுகமாகும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக ஒரு பேட்டியில் முன்பு கூறியிருந்தார்.
அந்த நல்ல நாளும் வந்தது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி நடித்த ‘ஏஸ்’ படம் அண்மையில் வெளியானது.
ஆனால், படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. திரையரங்குகளில் வெளியான இரண்டு நாள்களுக்குள் படத்தின் வசூல் முடங்கிவிட்டதாம்.
ஆனால் ருக்மிணி முடங்கிவிடவில்லை. தாம் அடுத்து நடிக்க உள்ள ‘மதராஸி’ படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.
“ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது சாதாரணமல்ல. மேலும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவே இல்லை.
“இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. எனவே, ரசிகர்களைக் கவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்,” என்கிறார் ருக்மிணி.
மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைகாண உள்ளது.