மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் நாயகன் கமல் ஹாசன், அந்தப் படம் ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சியன்று எனத் தெரிவித்துள்ளார்.
‘தக் லைஃப்’ படம் ஜூன் 5ல் வெளியாகிறது. இதுதொடர்பாகப் படத்தில் நடித்த கமல், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “‘தக் லைஃப்’ படம் அனைவருக்கும் பிடிக்கும். மணிரத்னம் வெகுநாள்களாக இயக்க நினைத்த சினிமாவை இப்போதுதான் இயக்கியிருக்கிறார். படத்தை அவர் அவரது பாணியில் இயக்கி உள்ளார். நான் என் பாணியில் நடித்துள்ளேன்.
“நாயகன் படத்தின் சாயலே தெரியாத அளவுக்கு இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இது ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சியன்று என்பதை பல இடங்களில் கூறியுள்ளோம்.
“அடுத்த தலைமுறை நடிகர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெருமை. அவர்கள் இன்னும் மேலே உயரணும் என்பதுதான் என் ஆசை.
“என்னைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள். நானும் அவர்களைப் பார்த்து நிறைய விஷயம் கற்றுக்கொள்கிறேன். ‘ஏஐ’ குறித்து கற்கத்தான் போனேன். ஆனால், அது நம்மைவிட பெரியது.
“அதுபற்றி முழுமையாகத் தெரியாமல் நான் பயன்படுத்த மாட்டேன். வாழ்வில் மரணத்தைத் தவிர்க்க முடியாது. இருப்பதற்குள் நாம் என்ன பண்ண முடியுமோ அதைச் செய்துவிடவேண்டும்,’’ என்றார்.