படமாக்கப்படும் நாவல்; நாயகனாக சசிகுமார்

படமாக்கப்படும் நாவல்; நாயகனாக சசிகுமார்

1 mins read
2a0c3dd5-293d-48ef-86c3-6f1709be43cb
(இடமிருந்து) இயக்குநர் இரா. சரவணன், மில்லியன் டாலர் தயாரிப்பாளர் யுவராஜ், சசிகுமார். - படம்: தினமணி

‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ போன்ற படங்களை இயக்கி, ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் இரா. சரவணன். கடைசியாக, நடிகர் சசிகுமாரை வைத்து ‘நந்தன்’ என்கிற அரசியல் படமொன்றை எடுத்தார்.

பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்ற அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சரவணன் எழுதிய ‘சங்காரம்’ என்கிற நாவலை அவரே இயக்கவுள்ளார். மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்கும் அப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதற்கிடையே, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

‘தோழா’, ‘குக்கூ’, ‘மெகந்தி சர்கஸ்’ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த ராஜு முருகன் அப்படத்தை இயக்கி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்