நடிகர்கள் சந்தானம், ஜீவா ஆகிய இருவருமே இயக்குநர் எம்.ராஜேஷ் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர்.
மூவரையும் இணைத்த ‘சிவா மனசுல சக்தி’ படம் வெளியானது முதலே இவர்களின் நட்பு வலுவடைந்து வருகிறது.
வாய்ப்பு கிடைக்கும்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு மணிக்கணக்கில் பேசுவோம். அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்வதுண்டு.
அந்த தருணங்களில் அடுத்தடுத்த படங்கள் குறித்து விவாதிப்போம் என்கிறார் ஜீவா. மூவரும் இணைந்து மீண்டும் ஒரு ஜாலியான படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக ஜீவா தரப்பில் கூறப்படுகிறது.

