தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோகன்லால் ஊட்டி வீட்டின் ஒரு நாள் வாடகை ரூ.37,000

1 mins read
572ddf5b-f4ce-45ef-abd2-cbd0a8f50c8c
ரூ.37,000க்கு வாடகைக்கு விடப்படும் மோகன்லாலின் விருந்தினர் இல்லம். - படம்: ஊடகம்

மலையாளத் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர்களாக 65 வயது மோகன்லாலும் 73 வயது மம்முட்டியும் வலம் வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள தனது வீடு ஒன்றை விருந்தினர் தங்கிச் செல்லும் இல்லமாக மாற்றினார் மம்முட்டி. அதை வாடகைக்கு விட்டு வருகிறார்.

மம்முட்டியின் வீட்டில் தங்குவது போன்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் அங்கு சென்று தங்கிவிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மம்முட்டி பாணியில் மோகன்லாலும் தமிழ்நாட்டின் ஊட்டியில் உள்ள தனது வீடு ஒன்றை சுற்றுலாப் பயணிகளுக்காகத் தினசரி வாடகைக்கு விடத் துவங்கியுள்ளார்.

அங்கு ஒரு நாள் தங்க ரூ.37,000 வாடகை வசூலிக்கப்படுகிறதாம்.

அந்த வீட்டில் மூன்று அறைகளுடன் அனைத்து விதமான ஆடம்பர வசதிகளும் உள்ளதாம். ஒரு ஓவியக் கூடமும் பார்வையிட வைக்கப்பட்டு உள்ளதாம்.

அத்துடன், ‘மரைக்காயர்’ படத்திற்காகத் தான் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகளையும் அங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறாராம் மோகன்லால்.

அத்துடன், மோகன்லாலுக்கு ருசியாக சமைத்துப் போடும் சமையல்காரரே அங்கு வாடகைக்கு தங்க வரும் சுற்றுப் பயணிகளுக்கும் சமைத்துப்போட நியமிக்கப்பட்டு உள்ளாராம்.

இதனால் ஊட்டியில் உள்ள மோகன்லால் வீட்டில் தங்க கிராக்கி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்