தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரம்மாண்டமான படங்களுக்கு மட்டும் குத்தாட்டம்: ஸ்ரீ லீலா

1 mins read
d5671eaa-dc60-4c71-9b1f-8343bfee7f89
குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நடனமாட மறுக்கும் ஸ்ரீ லீலா. - படம்: ஊடகம்

‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலில் ஸ்ரீ லீலா ஆடியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோல் நடனமாட தன்னை அழைப்பதாகச் சொல்லும் அவர், “உலகமே எதிர்நோக்கி காத்திருந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதும், நாயகியாக நடிப்பதும் ஒன்றுதான். அந்தளவுக்கு இப்படத்தின் மூலமாக எனக்கு வரவேற்பு கிடைக்கும் என்று தெரியும். அதனால்தான் சம்மதித்தேன்.

“அதற்காக இதுபோல் எல்லா படத்திலும் ஆடும்படி கேட்டால், என்னால் முடியாது என்றே சொல்வேன். குறைந்த பட்ஜெட் படங்களில் கண்டிப்பாக ஆட மாட்டேன். இதைச் சொல்ல வெட்கப்படவில்லை.

“நானும் மற்றவர்களைப் போல் எனது வருமானத்தைப் பார்க்கும் சராசரியான ஒரு நடிகைதான். தமிழில் எனக்கு வாய்ப்புகள் அதிகமாக வருவது உண்மை. கால்ஷீட் பிரச்சினை எதுவும் ஏற்படாவிட்டால் தமிழில் நான் தொடர்ந்து நடிப்பேன்,” என்றார் ஸ்ரீ லீலா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்