ஆயுள் முழுவதும் 1 மணி நேரம்தான் பேச்சு: கண்கலங்கிய தேவா

ஆயுள் முழுவதும் 1 மணி நேரம்தான் பேச்சு: கண்கலங்கிய தேவா

படம்: ஊடகம்

11 Nov 2025 - 12:52 pm

1 mins read

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ், உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காலமானார்.

சபேஷின் நினைவு அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு சபேஷ் குறித்துப் பேசிய இசையமைப்பாளர் தேவா, “என் தம்பி சபேஷ் சின்ன வயசுல இருந்தே அமைதியாகத்தான் இருப்பான். எந்தக் கஷ்டத்தையும் வெளியில் சொல்ல மாட்டான். அவன் பிறந்ததில் இருந்து இறந்தது வரை மொத்தமாகவே ஒருமணி நேரம்தான் அவனிடம் பேசியிருப்பேன். கடைசி நேரத்துலகூட எதுவுமே சொல்லாமல் போயிட்டான். எங்க குடும்பத்துல முதன் முதலில் கீபோர்ட் வாசிக்க அவன்தான் போனான்.

“15 வருஷமாக நானும் என் தம்பிகளும் காலை 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்து இரவு 11 மணிக்குத்தான் திரும்பிப் போவோம்.

“அதனால அவனை என்னால மறக்க முடியல. என் தம்பிங்க இல்லைனா நான் இல்லை. இந்த இசையமைப்பாளர் என்ற பதவியே எனக்கு வந்திருக்காது.

“இந்த சினிமா உலகத்தை என் தம்பிகள் சபேஷ், முரளி இரண்டு பேரும்தான் காண்பித்தார்கள்,” என கண்கலங்கிப் பேசியிருக்கிறார் தேவா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்