நடிகை நிகிலா விமல் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘பெண்ணுகேசு’ என்ற மலையாளப் படம்.
இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பலரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளும் மோசடிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிகிலா விமல்.
இதற்காக படம் முழுவதும் 13 வெவ்வேறு தோற்றங்களில் திரையில் தோன்றுவார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது என்கிறார் நிகிலா.
“இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ஆண்கள் நடித்தால் யாரும் அதைப் பெரிதாக விமர்சிப்பதில்லை. ஆனால், ஒரு பெண் நடித்தால் மட்டும் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது,” என்று அண்மைய சமூக ஊடகப்பதிவில் நிகிலா கொந்தளித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 16ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.
அண்மைக்காலமாக நிகிலாவுக்கு நல்ல நேரம்தான், அவர் நடித்த ‘வாழை’, ’குருவாயூர் அம்பல நடையில்’ என தொடர்ந்து வெற்றி படங்களி்ல் நடித்து வருகிறார்.

