தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறு பேருக்கு வாய்ப்பு

1 mins read
3520d3ea-d633-4f7e-9b04-4659be41a9d1
மாணவர்களுடன் ஜேம்ஸ் வசந்தன். - படம்: ஊடகம்

திரைப்படம் ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்றாகப் பாடும் திறன் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த முடிவு செய்தார் மாவட்ட ஆட்சியர்.

கடந்த ஜனவரியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வரவழைத்து அவர்களின் பாடும் திறன் சோதிக்கப்பட்டது.

“இவர்களில் சிறப்பாகப் பாடிய 20 மாணவ மாணவிகளுக்கு திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குழுவினர் மூலம் இணையம் வழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

“இவர்களை வைத்து விரைவில் ஓர் இசைக் கச்சேரியை அரங்கேற்ற உள்ளோம்,” என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியரையும் இசையமைப்பாளரையும் பலரும் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்