‘பராசக்தி’யில் சிவாஜி படம் - வலுக்கும் எதிர்ப்பு!

1 mins read
8d6beeca-4aa6-486e-ad65-41a677a56e9f
சிவாஜியிடம் இருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவது போன்ற விளம்பர சுவரொட்டியால் பிரச்சினை. - படம்: மாலை மலர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பராசக்தி’ படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கெனவே ‘பராசக்தி’ என்ற தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜியிடமிருந்து சிவகார்த்திகேயன் ‘தீப்பந்தம்’ பெறுவது போன்ற படத்தை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

“பிரபு, விக்ரம் பிரபு என வாரிசுகள் இருக்கும்போது, இத்தகைய விளம்பரம் முறையற்றது. சுயலாபத்திற்காக சிவாஜியின் புகைப்படத்தை பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது,” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்