மொழிகடந்து வெற்றிபெற உதவிய ஓடிடி, சமூக ஊடகங்கள்: மாளவிகா மோகன்

2 mins read
8f59bb31-07f1-41d0-b602-16a39c8311b0
மாளவிகா மோகன். - படம்: ஃபிலிமிபீட்ஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அவர் பிரபாசுடன் நடித்துள்ள ‘த ராஜா சாப்’ வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) வெளியானது.

அப்படத்​தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ஓடிடி, சமூக ஊடகங்​கள் காரண​மாக மொழிக்கான எல்​லைகள் மங்​கி​விட்​டது என்றும் நடிகர், நடிகைகளுக்கு இது அற்​புத​மான கால​ம் என்றும் கூறினார்.

மேலும், “எந்த மொழி​யில் நல்ல படத்​தைக் கொடுத்​தா​லும் அது மக்​களுக்​குப் பிடித்​திருந்​தால், பரவலாகச் சென்​றடை​யும். மொழி தாண்டிப் படங்களும் நடிகர்களும் வெற்​றி​பெறும் நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது,” என மாளவிகா தெரிவித்தார்.

தற்போது திரையுலகில் நிலவும் சூழலைத் தனிப்​பட்ட முறை​யில் மிக​வும் விரும்​பு​கிறேன் எனக் கூறிய அவர், பல்​வேறு துறை​களில் உள்ள முன்​னணி கதா​நாயகர்​களு​ட​னும் சிறந்த இயக்​குநர்​களு​ட​னும் பணி​யாற்றி வரு​வதாகக் குறிப்பிட்டார்.

மலை​யாளத்​தில் மோகன்​லாலுடன் ‘ஹிருதயபூர்​வம்’, தமிழில் விக்​ர​முடன் ‘தங்​கலான்’, விஜய்​யுடன் ‘மாஸ்​டர்’, தெலுங்​கில் பிர​பாசுடன் ‘த ராஜா சாப்’ ஆகிய படங்​களில் மாளவிகா நடித்​திருக்​கிறார்.

“முன்​னணி நடிகர்​களு​டன் பணி​யாற்​று​வது மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. வெவ்​வேறு கதை அம்சங்கள் நிறைந்த படங்​களில் நடிப்​ப​தை​யும் பலவித​மான இயக்​குநர்​களிடம் பணி​யாற்று​வதை​யும் விரும்​பு​கிறேன்,” என்றார் மாளவிகா.

மேலும், ‘தங்​கலான்’ படத்தில் பழங்​குடி தெய்​வ​மாக நடித்​தேன். ‘ஹிருதயபூர்​வம்’ படத்​தில் புனேவைச் சேர்ந்த யதார்த்​தமான நகரத்​துப் பெண், ‘த ராஜா சாப்’ படத்​தில் வித்​தி​யாச​மான கதா​பாத்​திரம் என முற்​றி​லும் மாறுபட்ட வேடங்​களில் நடித்து வரு​கிறேன். ஒரு நடிகை​யாக என்னை நானே ஆராய்ந்து பார்ப்​பதும் எனக்குப் பிடித்​திருக்​கிறது,” என்​று அவர் தெரி​வித்​தார்​.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்