வாரந்தோறும் பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாக இருக்கின்றன.
டிடி நெக்ஸ் லெவல்
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ் லெவல்’. இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஆலப்புழா ஜிம்கானா
காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’. இப்படம் குத்துச்சண்டையை மையமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நஸ்லென், லுக்மன் அவரன், கணபதி, அனகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ‘சோனி லைவ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
சுபம்
சமந்தா தயாரிப்பில் உருவான முதல் தெலுங்குப் படம் ‘சுபம்’. இதில் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் ‘ஹாட்ஸ்டார்’ தளத்தில் வெளியாகி இருக்கிறது.
லெவன்
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் ‘லெவன்’. விறுவிறுப்பான புலனாய்வு திகில் படமாக உருவாகியுள்ள இந்தப் படமும் ‘ஆஹா’ தமிழ் மற்றும் ‘டெண்ட்கொட்டா’ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.