எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி கிடைத்துள்ளார்: சித்தார்த்

1 mins read
0259bb70-4acf-4933-a5c1-3fd76876482b
சித்தார்த்-அதிதி ராவ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

அதிதி போன்ற ஒரு பெண் மனைவியாக அமைந்தது நான் பெற்ற வரம் என்று நேர்காணல் ஒன்றில் சித்தார்த் கூறியுள்ளார்.

“எனக்கு எல்லாமே என் பெற்றோர்தான். அவர்களை மகிழ்விக்கும் விதமாக எங்கள் வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி கிடைத்துள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் திரைப்பயணமும் நன்றாக செல்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் ஹைத்ரி இருவரும் தற்போது இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதமே இவர்களது திருமணம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிஷன்கார்க் பகுதியில் உள்ள அலியா கோட்டையில் இந்து முறைப்படி இரண்டாவது முறையாக இப்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில், “வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிப்பதே,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ’மகா சமுத்திரம்’ படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். இந்தக் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்