இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘சேவியர்’ என்ற படத்தில், நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை ஓவியா.
கடந்த மூன்றாண்டுகளாக ஓவியாவுக்கு நல்ல வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘90 எம்.எல்’, ‘களவாணி 2’ ஆகிய படங்களில் நடித்த அவர், கடைசியாக ‘பூமர் அங்கிள்’ என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஹர்பஜன் சிங்குடன் இணைந்துள்ள படத்தில் ‘வர்ணா‘ என்ற கதாபாத்திரம் ஓவியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையில் நிகழும் திகில் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதையாம்.
டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹர்பஜன்.
ஜான் பால்ராஜ் இயக்கும் இந்தப்படத்துக்கு மாணிக் இசையமைக்கிறார்.