‘படையப்பா’ படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தற்போது பழைய படங்களை மறுவெளியீடு செய்வது அதிகரிக்கும் நிலையில், ‘படையப்பா’வும் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளார்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி இப்படம் மறுவெளியீடு கண்டது. ரசிகர்களின் அமோக ஆதரவுடன் 25 நாள்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதனிடையே, ‘படையப்பா’ இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர்.

