தெலுங்குப் படமான ‘ஏ மாயா சேசாவே’வில் நடித்தபோது, நாக சைதன்யாவை காதலித்து மணந்தார் சமந்தா.
இதற்குக் காரணமான இப்படத்தின் தலைப்பை ‘ஒய்எம்சி’ என்று சுருக்கி, தன் கழுத்தின் பின்பகுதியில் அவர் பச்சை குத்திக் கொண்டார்.
திருமணத்துக்குப் பின்னர் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்ததும் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை மறுமணம் செய்ததும் யாரும் எதிர்பாராத திருப்பங்கள். சமந்தா இன்னும் மறுமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில், நாக சைதன்யாவைக் காதலித்தபோது தன் உடலில் பச்சை குத்திக்கொண்டது அடிக்கடி நினைவுக்கு வந்து வேதனை தரவே, அந்த அடையாளங்களை அகற்றிவிட முடிவு செய்த சமந்தா, முதற்கட்டமாக ‘ஒய்எம்சி’ என்ற படத் தலைப்பை தன் உடலில் இருந்து அகற்றியுள்ளார்.
அவர் அண்மையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளி மூலம் இது தெரிய வந்துள்ளது.