ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘பராசக்தி’.
இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். மேலும், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூசை போடப்பட்டு படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையிலும் மதுரையிலும் சில காட்சிகளைப் படமாக்கினர்.
இந்நிலையில், இப்படக்குழு இலங்கை சென்றுள்ளது. அங்கு சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்துடன் தொடர்புடைய முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம்.
படப்பிடிப்பின்போது அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கைகொடுத்தார். சிலருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.