‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற புதிய படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது.
இந்நிலையில், மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு படத்தை 45 நாள்களில் இயக்கி முடித்துள்ளார் ராம். இதில் சிவா நடுத்தர வயதுள்ள தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்துக்கு, ‘பறந்து போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் அடுத்த மாதம் நடைபெற உள்ள ‘ரோட்டர்டாம்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.