சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்ற ‘பறந்து போ’

1 mins read
cac31432-5c5d-427d-8eba-7e3904b4931b
 ‘பறந்து போ’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா விகடன்

சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘பறந்து போ’ சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 18 படங்கள் போட்டியிட்டன.

தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ முதல் இடத்தையும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் இரண்டாம் இடத்தையும் பெற்றன.

சிறந்த படத்துக்கான நடுவர் குழு விருது ‘மெட்ராஸ் மேட்னி’ படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த சசிகுமாரும் சிறந்த நடிகையாக ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தில் நடித்த லிஜோ மோலும் தேர்வு செய்யப்பட்டனர்.

‘அலங்கு’ படத்தில் பணியாற்றிய பாண்டிகுமார் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் ‘மாயக்கூத்து’ படத்தின் நாகூரான் ராமசந்திரன் சிறந்த படத் தொகுப்பாளராகவும் இதே படத்தில் பணியாற்றிய அழகிய கூத்தன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்