சிங்கப்பூரில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி படைக்கும் பிரதீப் குமார்

சிங்கப்பூரில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி படைக்கும் பிரதீப் குமார்

1 mins read
d58e7ad7-11c5-4e58-80c6-edb8e2bbb49f
புதன்கிழமை (மே 22) நடைபெறும் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கினார் பின்னணிப் பாடகர் பிரதீப் குமார் (இடமிருந்து 2வது). மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் நிறுவன உரிமையாளர் பார்த்திபன் முருகையன் உடன் உள்ளார் (இடமிருந்து 3வது). - படம்: மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ்
multi-img1 of 2

இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார், 38, சிங்கப்பூரில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி படைக்க இங்கு வந்துள்ளார்.

புதன்கிழமை (மே 22) இரவு 7 மணியளவில், ‘பறந்து போகின்றேன் வித் பிரதீப் குமார்’ என்ற இசை நிகழ்ச்சியில் தி ஸ்டார் அரங்கில் மேடையேறி ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பாடல்களைப் பாடி அசத்தவிருக்கிறார்.

இஸ்தாரா நகைக்கடை உரிமையாளர் பார்த்திபன் முருகையனுக்குச் சொந்தமான ‘மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ்’ ஊடகத் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் இந்த நிகழ்ச்சியில், தாம் பாடிய பிரபல திரைப்படப் பாடல்களையும் தாம் இசையமைத்த பாடல்களையும் பிரதீப் பாடவுள்ளார்.

மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை 2016ல் நிறுவிய திரு பார்த்திபன், “மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு நிறுத்திவிடுவதில்லை. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கும் நாங்கள் ஆதரவளித்து வருகிறோம்,” என்றார்.

நிகழ்ச்சிக்கான $65 முதல் $275 வரை உள்ள நுழைவுச்சீட்டுகளை புதன்கிழமை (மே 22) மாலை 5 மணி வரை https://www.sistic.com.sg/events/pradeep0524 எனும் இணையத்தளத்தில் வாங்கலாம்.

புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே உள்ள தி ஸ்டார் நிகழ்கலைகள் நிலையத்திற்குள் மாலை 5.30 மணியிலிருந்து நுழையலாம்.

2010 முதல் தமிழ்ப் பாடல்களை பாடிவரும் பிரதீப், 40க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் இசையமைத்தும் உள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை 2015ல் பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்