மறு தணிக்கைக்குச் செல்லும் ‘பராசக்தி’ படம்

1 mins read
14c0c760-c30c-44ba-8261-b4b167a4ec55
‘பராசக்தி’ படச் சுவரொட்டி. - படம்: எம்9.நியூஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் மறு தணிக்கைக்குச் செல்வதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 1960களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது.

வரும் ஜனவரி 10ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், குறிபிட்ட சில காட்சிகளை நீக்குமாறு கூறினார்களாம். ஆனால், அக்காட்சிகளை நீக்கினால் கதையின் தன்மையே மாறிவிடும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் சுதா.

இதையடுத்து, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப படத்தின் தயாரிப்புத்தரப்பு முடிவு செய்துள்ளது.

‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் சகோதரர்களாக நடித்துள்ளனர். ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்