‘பராசக்தி’ படம் தமக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்கிறார் நடிகர் அதர்வா.
தம் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆகாஷ் பாஸ்கரனை ஓர் இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் முதலில் விவரித்தது ஆகாஷ்தான்.
“இந்தப் படம் வெளியான பிறகு இந்தியத் திரைத்துறையில் பேசுபொருளாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
“நடிகர் ரவி மோகன் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி. ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்பார்கள்.
“ரவிமோகன் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டின. நானும் அதையே பின்பற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளேன்,” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அதர்வா.
இயக்குநர் சுதாவின் பெருந்தன்மை தம்மை வியக்க வைத்ததாகவும் முதன்முறை சந்தித்தபோதே, ‘மேடம்’ எனத் தம்மைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் அதர்வா நினைவு கூர்ந்துள்ளார்.
“திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும்கூட சிவகார்த்திகேயன் ளனது சகோதரரைப் போன்றவர்,” என்று குறிப்பிட்டுள்ள அவர், சுதாவின் வளர்ச்சியை வியப்புடன் கவனித்து வருவதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“சினிமாவின் தனது ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைக்கிறார் சிவா. அவரது வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
“தமிழகத்தை வடிவமைக்க மாணவர் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது,” என்று அதர்வா மேலும் தெரிவித்துள்ளார்.

