‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்புதிய படத்துக்கு ‘பராசக்தி’ எனத் தலைப்பு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படம் இந்தித் திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார். மேலும், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார் என்றும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.