தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பருத்தி வீரன்' செவ்வாழை ராசு காலமானார்

1 mins read
3218a4a2-8bf4-4a67-a8a2-9a5ba13664f0
படம்: டுவிட்டர் -

'பருத்தி வீரன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணசித்திர நடிகராக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த செவ்வாழை ராசு காலமானார்.

அவருக்கு வயது 70.

தனது வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான செவ்வாழை ராசு, 'பருத்திவீரன்' படத்தில் அதன் நாயகன் கார்த்திக்கு அறிவுரை கூறச்சென்று, அவரிடம் குட்டு வாங்கித்திரும்பும் காட்சிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் அவர் ஏராளமான படங்களில் நடித்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி