‘மரியான்’ படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த பார்வதி

1 mins read
e6cbbb04-c078-482f-a9c5-1921d782fa56
நடிகை பார்வதி. - படம்: கேரளா9.காம்

தனுஷின் ‘மரி​யான்’ படப்​பிடிப்​பு அனுபவம் குறித்து அண்மையில் நடந்த நேர்காணலில் அப்படத்தில் நாயகியாக நடித்த பார்வதி தெரிவித்துள்ளார்.

மலை​யாள நடிகை​யான அவர், தமிழில் வெளி​யான ‘பூ’, ‘மரியான்’, உத்​தம வில்லன்’, ‘தங்​கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்​தார்.

‘மரி​யான்’ படப்பிடிப்பின்போது தன்னை உடை மாற்ற அனுமதிக்க​வில்லை என நேர்காணல் ஒன்றில் வருத்​தத்துடன் அவர் கூறினார்.

“தண்​ணீரில் முழுவதுமாக நனைந்​த​படி அப்படத்தில் நடித்​தேன். அது ஒரு காதல் காட்சி. எனக்கு அக்காட்சியில் நடிப்பதற்குத் தேவை​யான வசதிகளைக் கவனித்துக்கொள்ள அங்கு யாரும் இல்​லை. ஒரு கட்டத்தில், உடை மாற்​று​வதற்​காக நான் என் ஓட்​டல் அறைக்குச் செல்ல வேண்​டும் என்று சொல்ல வேண்டியிருந்​தது. அதற்கு அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை,” எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.

மேலும், அப்படப்பிடிப்​புத் தளத்​தில், தன்​னையும் சேர்த்து மொத்​தம் 3 பெண்​கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும் அது தனக்கு கடின​மாக இருந்ததாகவும் தனக்​கு ஆதர​வாக அங்குயாரு​மில்லையெனவும் பார்வதி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்