‘பசங்க’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஶ்ரீராம், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.
பின்னர் ‘கற்றது தமிழ்’, ‘கோலி சோடா’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் தன் காதலி நிகில் பிரியாவை மணந்துள்ளார்.
திரையுலகத்தைக் கடந்து சொந்த நிறுவனம் நடத்துகிறாராம் ஸ்ரீராம்.
“இந்த நிறுவனம் மூலமாகத்தான் என் மனைவியுடன் அறிமுகமானேன். எனக்குத் திருமணம் நடக்கப் போவதாகச் சொன்னபோது யாரும் நம்பவில்லை.
“எல்லாரும் இப்போது என்னை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கிறார்கள். ஆனால் இப்போது எனக்கு 29 வயதாகிறது.
“சொந்த நிறுவனத்தைக் கவனிப்பதால், சினிமாவில் நடிக்க நேரம் இல்லை.
“நான் இதுவரை நடித்த படங்களின் இயக்குநர்கள், உடன் பணியாற்றிய நண்பர்கள் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
“வாழ்க்கையைச் சரியாகவும் பொறுப்பாகவும் கொண்டு செல்ல வேண்டும் என நானும் என் மனைவியும் முடிவு செய்துள்ளோம்,” என்கிறார் ஸ்ரீராம்.