தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர்களின் ஊதியம் கடந்து வந்த பாதை

5 mins read
53bc5b99-5dbf-4f41-9d06-5176761d6b7b
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்
multi-img1 of 6

ஒரு காலத்தில், ‘தகர டப்பா மூஞ்சி’ எனப் பிரபல வாரப் பத்திரிகையால் விமர்சிக்கப்பட்டார் விஜய். பிறகு கடுமையாக உழைத்து, இன்று எல்லோரும் ரசிக்கும் முகமாக மாறி சாதனை புரிந்துள்ளார்.

‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’ உள்ளிட்ட படங்களின் வெற்றி, விஜய்யை அரை கோடி சம்பளம் வாங்கும் நாயகனாக உயர்த்தியது. பின்னர் ‘காதலுக்கு மரியாதை’ படம் அரை கோடி நாயகனாக மாற்றியது.

இப்படி மென்மையான காதல் நாயகனாக வலம் வந்த விஜய்யை ‘பகவதி’ படம் அதிரடி நாயகன் அந்தஸ்தை உயர்த்தியது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10, 12 கோடி சம்பளம் வாங்கிய விஜய், சில படங்களின் தோல்விகளால் துவண்டார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சுறா’ படத்தின் தோல்விக்குப் பிறகு விஜய் உஷாரானார்.

‘காவலன்’, ‘வேலாயுதம்’ எனத் தேர்ந்தெடுத்து வெற்றிப் படங்களைத் தந்தார்.

‘காவலன்’ பட வெற்றி விழா ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏறச் சென்ற விஜய்யை அப்போதைய திமுக அரசு விழாவுக்கு அனுமதி இல்லை என திருப்பி அனுப்பியது.

இதனால் அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனால்தான், அதன் பிறகு வெளியான ‘வேலாயுதம்’ படத்தில், ‘நான் ஆளுங்கட்சிப்பா’ என விஜய் வசனம் பேசுவார்.

அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். இதனால் விஜய்க்கு செல்வாக்கு கூடியது. திரையுலகில் அதன் பிறகுதான் அவரது ஊதியம் ரூ.100 கோடியை எட்டியது.

விஜய் தொடர் வெற்றிகளையும் கொடுத்தார். விஜய்யின் சம்பள உயர்வுக்கு ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் லலித் என்பவர்தான் காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்தப் படம் 400 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என சில தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி பணத்தை அள்ளிவிட்டார். தனக்கு கிடைத்த அந்த லாபத்தில் விஜய்க்கு ரூ.150 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கிறார் லலிதா.

தற்போது தன் கடைசி படத்தில் நடித்துவரும் விஜய்க்கு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எவ்வளவு சம்பளம் என்பதை சூசகமாகச் சொல்லியிருக்கிறார்.

விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் ‘ஜனநாயகன்’ விஜய் பண நாயகன் ஆன கதை.

அஜித்

2023-2024ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தது அஜித்தின் பெயர்.

‘மங்காத்தா’ படத்தின் மாபெரும் வெற்றிதான் அஜித்தை ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்த்தியது.

இப்போது நடித்து முடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு ரூ.150 கோடி சம்பளமாகப் பெற்றிருக்கிறார் இந்த ‘விடாமுயற்சி’ நாயகன் அஜித்.

சூர்யா

என் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பதுபோல் சூர்யாவும் தன் தந்தையைப் பிரதிபலிப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தார்.

விக்ரமன் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் ‘உன்னை நினைத்து’ படத்தில், விஜய் நடிக்க மறுத்த நிலையில், சூர்யா அதில் நடித்தார். படம் வெற்றி.

சூர்யா நடிப்பின் மீது ரசிகர்களுக்கு ஒரு ‘பரிதாப உணர்வு’ ஏற்படும்படி அந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது. ஆனாலும் சூர்யாவின் நடிப்பில் தனித்துவம் இல்லாததுபோல் ரசிகர்கள் உணர்ந்தனர்.

இந்நிலையில்தான் இயக்குநர் பாலாவின் வடிவமைப்பில், ‘நந்தா’ படத்தில் புதிய சூர்யாவாக அசத்தினார் சூர்யா. அப்போதெல்லாம் அவர் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

‘அயன்’, ‘ஆதவன்’ ஆகிய படங்கள் வெளியானதும் ரூ.15 கோடி நாயகனாக சூர்யாவின் அந்தஸ்து உயர்ந்தது.

‘சிங்கம்’ படம் தென்னிந்திய திரைப்படச் சந்தையில் சூர்யாவுக்கு வர்த்தக மதிப்பை ஏற்படுத்தி தந்தது.

தெலுங்கில் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியதால், தெலுங்கு உரிமம் உட்பட மொத்தம் ரூ.15 கோடி மதிப்பில் சம்பளம் வாங்கினார்.

அந்த காலகட்டத்தில் விஜய், அஜித் ஆகியோரைவிட சூர்யாவின் சம்பளம் உயர்ந்து நின்றது. ‘காக்க காக்க’ படம் சூர்யாவை ஸ்டைலான ஆக்‌ஷன் நாயகன் என்ற மதிப்பைத் தந்து உயர்த்தியது.

‘கங்குவா’ படத்திற்காக ரூ.40 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார் சூர்யா. இப்படித்தான் சிங்க கர்ஜனை மூலம் சூர்யாவின் வர்த்தக மதிப்பு உயர்ந்தது.

கார்த்தி, விக்ரம் இவர்களின் சம்பளம் ரூ.20 கோடி.

விஷால், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் இரண்டு அல்லது ரூ.10 கோடி சம்பளம் வாங்கினர்.

தனுஷ், யோகிபாபு, வடிவேலு

வடிவேலு தன் மொத்த சம்பளத்தைச் சொன்னால் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படும் என்பதால் துணை நடிகர்கள் பாணியில், ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம், முதல் நாளே கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் அந்தப் ‘பிளான்’.

அதே பாணியைப் பின்பற்றி வரும் யோகி பாபு, ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் என சம்பளம் வாங்கி வருகிறார்.

சம்பள விஷயத்தில் தனுஷின் பாணி இதுதான். அதன்படி, ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் 50 நாள்கள். அதிகபட்சம் 60 நாள்கள் என கால்ஷீட் கணக்கிட்டு, ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

சிவகார்த்திகேயன்

ஆறு முதல் அறுபது வயது வந்தவர்களை, ரசிகர்களாக கொண்டிருப்பவர்கள் ரஜினியும் விஜய்யும்.

இப்படி பாரபட்சமற்ற ரசிகர்கள் அமைந்திருப்பது சிவகார்த்திகேயனுக்கும் பெரும் பலம்.

‘மெரினா’ படத்திற்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கிய நிலையில் இருந்து, இன்று ரூ.25-30 கோடி சம்பளம் பெறும் நாயகனாக அவரை உயர்த்தியுள்ளது.

தன் மார்க்கெட்டை நிலைநிறுத்துவதற்காக சொந்தமாக பெரும் பட்ஜெட் படங்களைத் தயாரித்தார் சிவகார்த்திகேயன்.

கமல் தயாரிப்பில், ‘அமரன்’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் வசூலில் உச்சம் தொட்டிருக்கிறார்.

சம்பளம் மற்றும் படத்தின் வசூலில் பங்கு என்ற அடிப்படையில் ‘அமரன்’ படம் சுமார் ரூ.50 கோடியை அவருக்கு அள்ளித் தந்திருக்கிறது.

இப்போது இதே பாணியில் புதிய பட ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அரசியலுக்குப் போய்விட்ட விஜய் இடத்தை பிடிக்கப்போவது இவர்தான் என சினிமா பட்சிகள் ஆருடம் கூறுகின்றன.

விஜய் சேதுபதி

ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியின் சம்பளம் இப்போது ரூ.15 கோடி.

விஜய் சேதுபதியின் நோக்கம் நாயகன் அந்தஸ்தை தக்கவைக்க வேண்டும் என்பதல்ல. விதவிதமான, வித்தியாசமான வேடங்கள்தான் அவரது விருப்பம். அதனால்தான் சம்பளப் போட்டிகளில் அவர் கலந்துகொள்வதில்லை.

அண்மையில், ‘மகாராஜா’ எனும் வெற்றிப்படத்தைத் தந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படம் சீனாவிலும் வசூலைக் குவித்தது.

இப்படத்தின் வெற்றி விழா வேறு விதமாகக் கொண்டாடப்பட்டது. படம் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களையும் பெரிய நட்சத்திர தங்குவிடுதிக்கு வரவழைத்து, விருந்து கொடுத்தார் விஜய் சேதுபதி.

அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் பணம் பரிசாக அளிக்கப்பட்டது.

தன் படம் கடைசி நேரத்தில் பணப்பிரச்சினை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டால், அந்தப் படத்துக்கான சம்பளத்தை விட்டுக்கொடுத்துவிடுவார் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்