ஓடிடி தளத்தில் வெளியானது 'பதான்'

1 mins read
82401d9c-b1d9-495a-b03d-7539be9a1be0
'பதான்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜான் அப்ராஹாம், தீபிகா படுகோன், ஷாருக்கான். படம்: ஏஎஃப்பி -

ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' திரைப்படம் 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் புதன்கிழமை (மார்ச் 22) வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இத்திரைப்படத்தைக் காண முடியும்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் அப்ரஹாம் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'பதான்'.

'பேஷரம் ரங்' பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி நீச்சல் உடை, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்துக்கு எதிராக கிளம்பிய கடும் எதிர்ப்புகளையும் மீறி 'பதான்' வசூலில் சாதனை படைத்துள்ளது.

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம், அடுத்தடுத்த நாள்களிலும் வசூலில் முன்னேற்றம் கண்டது.

'பதான்' வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களான நிலையில், உலக அளவில் இத்திரைப்படம் ரூ.1,050 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.541 கோடியை வசூலித்து, இந்தியில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் இடம்பெறாத சில காட்சிகள், ஓடிடி தளத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.