தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர், நடிகைகளின் தத்துவங்கள்

3 mins read
34c7d65f-2571-4287-95d8-d5952459f9ff
சிம்பு. - படம்: ஊடகம்
multi-img1 of 9

உலகம் முழுவதும் தத்துவ ஆசிரியர்கள் பலர் இருந்தார்கள்... இருக்கிறார்கள்... இருப்பார்கள்.

ஆனால் நடைமுறை யதார்த்தத்தில் ஆண்களைவிட பெண்களே பலமுனை அனுபவ ஞானம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

அனுபவ மொழிக்குப் பிறந்த அழகிய குழந்தைதானே தத்துவம். போகிற போக்கில் தங்கள் அனுபவங்களைப் பழமொழிகளாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். அந்த வகையில் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள் நல்ல தத்துவ ஆசிரியர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இங்கே நாம் காணவிருப்பது பிரபல நடிகைகளின் தத்துவங்கள்.

சமூக ஊடகங்கள், பல்வேறு சூழல்களில் அவர் கூறிய தத்துவங்களைத் தொகுத்துள்ளோம்.

அமலா பாலின் தத்துவம்:

உங்கள் ஆன்மாவின் பரவசத்தை ருசி பார்த்துவிட்டால் மற்றவர்களின் ஆன்மாவின் பரவச நிலையையும் உணர்வீர்கள். இல்லையென்றால் உங்களுடைய ஆன்மா அவர்களுக்கு ஒரு வேற்றுக்கிரகவாசி (ஏலியன்) போலவே தனித்துத் தெரியும்.

சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதிலும் உலகம் உங்களைக் கீழே தள்ளும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும்.

சில நேரங்களில் புன்னகை தரும் மகிழ்ச்சியை தரும் எனில், சில தருணங்களில் தனிமையும் அதுபோன்ற மகிழ்ச்சியைத் தரும்.

காஜல் அகர்வால் தத்துவம்:

மகிழ்ச்சி என்பது உங்களுடைய சொந்த அலைகளை உருவாக்கும். ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதுமானது.

சமந்தா தத்துவம்:

வாழ்க்கை அருவியைப் போன்றது. அருவியை ரசிக்கவும் அதன் எழுச்சியை வியக்கவும் வீழ்ச்சியை சகித்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ளுங்கள்.

கடமையைச் செய்வது மட்டுமே உங்கள் பணி. அதற்கு கிடைக்கும் பலனை எதிர்பார்க்க முடியாது. நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசையோடு ஒருவர் செயல்களைச் செய்யக்கூடாது.

மரணத்தில் இருந்து நம்மை எதுவும் காப்பாற்றாது. எனவே, காதல் மூலமாவது வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜோதிகா தத்துவம்:

பெருந்தன்மையாக நடந்து கொள்வதே பெண்மையின் பெரும் சக்தி.

ஒருவர் மலைமீது ஏறி உச்சிக்குச் சென்று, மற்றவர்கள் கீழே இருப்பதைப் பார்ப்பதுதான் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே சாதனையல்ல.

நாம் மலையேறும்போது மற்றவர்களையும் கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். அதுதான் உண்மையான வெற்றி.

வாழத் தொடங்காத வரை வாழ்க்கை என்பது ஒரு இருப்பு மட்டுமே.

நயன்தாரா தத்துவம்:

உயிர் உள்ளவரை உண்மையும் உழைப்பும் நம்மிடம் இருந்தால் எப்போதுமே வாழ்க்கை மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.

மக்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நாய்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும்.

நமக்கு வயதாகும் போதுதான், சேவல்கள் ஏன் ஒருநாள் தொடங்குவதற்கு முன்னதாகவே கூவுகின்றன என்பது புரிகிறது.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. எப்போதும் அது ஓர் அற்புதம்.

தமன்னா தத்துவம்:

எதிர்பார்ப்பது நடக்காது, எதிர்பாராதது நடக்கும். நல்ல வாய்ப்பு எங்கிருந்து வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. திடீரென்று வரும், நம்மை உயரத்தில் உட்கார வைக்கும்.

- இப்படிப் பிரபல நடிகைகள் தத்துவ மழை பொழிந்திருக்கிறார்கள்.

சில நடிகர்களின் தத்துவங்களையும் பார்க்கலாம்.

ரவிமோகன் (ஜெயம் ரவி)

ஒன்றை நினைத்து நாம் கவலைப்படுவோம். அது நடக்காத ஒன்றுக்கு முன்கூட்டியே பணம் கொடுத்து வைத்த மாதிரி. எதுவும் நடக்கும்போது அதை நினைத்து கவலைப்படுவோம். அதுவரை மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும்.

கமல் தத்துவம்:

நாளைக்காக விதை போடுகிறேன். அதை வேறொருவர்தான் சாப்பிட முடியும்.

நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தை அடிக்கடி பணிமனைக்கு அனுப்ப வேண்டியதில்லை. அன்றாடம் நம் உடல்நலனைப் பேணுவதுபோல் ஜனநாயகத்தையும் பேண வேண்டும்.

அஜித் தத்துவம்:

மதமும் சாதியும் இதுவரை நீங்கள் சந்திக்காத மனிதர்களைக்கூட வெறுக்க வைக்கிறது.

சிம்பு தத்துவம்:

உயிர் இருக்கிறதா இல்லையா? அது இருக்கிறது என்றால் கடவுள் நமக்கு இன்னும் நேரம் கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.

அது போகும் நேரத்தில் மட்டும்தான், அய்யய்யோ... இனிமேல் நமக்கு வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட வேண்டும்.

இவ்வாறு நடிகர்களும் சில தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்