தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் வீரராக நடிப்பது எளிதன்று: சித்தார்த்

1 mins read
50d3eda0-ce8c-44a5-a794-3f91146bc67f
‘டெஸ்ட்’ படத்தில் சித்தார்த். - படம்: timelinedaily.com / இணையம்

நடிகர் சித்தார்த் தற்போது சஷிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார்.

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த்தின் ‘டெஸ்ட்’டில் நடித்துள்ளனர். இப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார் சித்தார்த்.

இதுகுறித்து பேசிய அவர், “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணிநேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி பலரும் அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட் வீரராக வெறுமனே நடித்து விடமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதன்று.

“பலரைப் பார்த்து ஊக்கமடைந்துதான் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

“கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட்டைப் பிடிக்கும்’‘ என்றார்.

குறிப்புச் சொற்கள்