தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிதை போன்ற சமூக ஊடகப் பதிவு: மாளவிகாவுக்கு ரசிகர்கள் பாராட்டு

2 mins read
f3370bdc-e022-409e-a95e-3a6da08d2b3b
மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தன் தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தை சிறு வயதில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

அவை அனைத்துமே அவர் சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.

“முன்பெல்லாம் அப்பா என்னையும் அம்மாவையும் வைத்து அழகான புகைப்படங்களை எடுப்பார். இவை விலைமதிப்பற்றவை, அரிதானவை என்பதை அந்த வயதில் நான் உணரவில்லை. ஏனென்றால், இந்தப் புகைப்படங்களை சுற்றிதான் நான் வளர்ந்தேன்.

“ஒவ்வொரு குடும்பங்களும் இப்படியான புகைப்படங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இப்போது எல்லாமே மின்னிலக்கமயம் ஆகிவிட்டது. அப்பாவும் புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டார்.

“மின்னிலக்கப் புகைப்படங்களில் காதலும் அன்பும் இல்லாததைப் போல் அவருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது புகைப்படங்கள் எடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. நாமும் எளிதான விஷயங்கள் செய்வதை நிறுத்திவிட்டோம்.

“என் தந்தையும் முன்புபோல் படச்சுருளைக் கொண்டு புகைப்படங்கள் எடுக்கும் அனுபவத்தை இழந்துவிட்டது குறித்து வருத்தப்பட்டிருக்கலாம்,” என்று மாளவிகா மோகனன் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பதிவைக் கண்ட ரசிகர்கள் பலரும், “ஒரு அழகான கவிதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது,” என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் அவரது தந்தை சிறந்த புகைப்படக் கலைஞர் என்பது அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தாலே தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சிறு வயது மாளவிகா தன் தாயைப் போல் அழகாக இருப்பதாக பலர் பின்னூட்டமிட்டிருப்பதும் மாளவிகாவை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

தன் தாயாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்