தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினியுடன் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் ‘ஜனநாயகன்’ படத்தின் நாயகி

1 mins read
b8c92d4a-1524-4776-b3c6-a33c60c2f32b
‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார் பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.

‘வேட்டையன்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலில் ரஜினியும் அவருடன் இணைந்து நடனம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.

‘பீஸ்ட்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’, லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா 4’ போன்ற படங்களில் தற்போது பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ என்ற ஒரு பாடலுக்கு தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். அந்தப் பாடல் மிகப் பெரிய அளவில் பலராலும் பார்க்கப்பட்டது.

அதுபோல இந்தப் படத்திலும் பூஜா ஹெக்டேயின் நடனத்தை கவர்ச்சியாக எடுக்க படப்பிடிப்புக் குழு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை