இந்தி, தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வரும் பூஜா ஹெக்டே, இப்போது கன்னடத்திலும் அறிமுகமாக உள்ளார்.
இவர் ரஜினியின் ‘கூலி’யில் ஒரு பாடலுக்கு ஆடுவது தெரியும். அந்தப் பாடல் காணொளியை விரைவில் வெளியிட உள்ளனர்.
தமிழில் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, ‘காஞ்சனா 4’ தவிர இந்தியில் இரண்டு படங்கள் என நடித்து வரும் பூஜா ஹெக்டே, கன்னடத்தில் சுதீப் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
இதையடுத்து பூஜாவைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த அன்பான வரவேற்பில் நெகிழ்ந்து போய்விட்டதாக கர்நாடகாவில் உள்ள தனது நட்புகளிடம் கூறியுள்ளார் பூஜா.