இந்த முறை ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கம் முதல் எல்லாமே தமக்குச் சாதகமாகவும் சிறப்பாகவும் நடந்து வருவதாகச் சொல்கிறார் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டேவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு இம்முறை பாலிவுட்டில்தான் பிறந்தது. அங்கே ஷாஹித் கபூருடன் நடித்த ‘தேவா’ ஜனவரியில் வெளியானது.
இதையடுத்து, தமிழில் நடிக்க வந்தவருக்கு சூர்யாவுடன் நடித்த ‘ரெட்ரோ’ படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. சூட்டோடு சூடாக விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றுக்கு இடையே ரஜினியுடன் ‘கூலி’யிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
விரைவில் தனது ரசிகர்களுக்கு சிறப்புத் தகவல் ஒன்றை வெளியிட உள்ளார் பூஜா.
தமிழில் முன்னணி நாயகனும் இளம் இயக்குநரும் கூட்டணி அமைத்துள்ள படத்தில் இவரும் இணைய உள்ளாராம். அந்த நாயகனின் பெயர் சற்று நீளமாக இருக்குமாம்.