சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் பொழுதுபோக்காகவும் ஒரு சில கதாபாத்திரங்கள் பிரமிப்பையும் ஏற்படுத்தும் .
ஆனால், ‘ரெட்ரோ’ படத்தில் பூஜா ஹெக்டே ருக்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலருக்கு சிறு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ருக்கு கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
முதல் காட்சியிலிருந்தே பூஜா ஹெக்டே தெரிந்த ஒருவரைப்போல் உணரும் வகையில் அடுத்த வீட்டுப் பெண் போல பலரைக் கவர்ந்துள்ளார். மேலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவியைப் போல் காட்சியளித்தார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.