தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாய் பேச முடியாதவராக நடிக்கும் பூஜா ஹெக்டே

1 mins read
bc29342a-8216-4de6-970c-bbc81e6424f7
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சூர்யா 44 படத்தின் முன்னோட்டக் காட்சியை, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, டிசம்பர் 25ஆம் தேதி வெளியிட்டனர். படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதுடன், 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவித்தனர்.

இதில் குளக்கரை ஒன்றில் பூஜா ஹெக்டேயுடன் சூர்யா பேசும் காட்சிகளும் இடம்பெற்றது. ஆனால் அதில் பூஜா ஹெக்டே பேசுவது போன்ற காட்சிகளும், வசனங்களும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை