விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குவதும் அனிருத் இசையமைப்பதும் உறுதியான நிலையில், அப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.
படக்குழுவினர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்தி நடிகர் பாபி தியோல் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.
இதற்கு முன்பு, ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் பூஜா.
எனினும் விஜய் ரசிகர்களை இந்தப்படம் திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
சூர்யாவின் 44வது படத்திலும் இந்தியில் உருவாகும் ‘தேவா’ என்ற படத்திலும் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் பூஜா.