ஏர் இந்தியா விமான விபத்தை அடுத்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த திரைப்பட விழாக்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி ஜூன் 13ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தள்ளிவைக்கப்பட்டதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதேபோல், ஜூன் 13ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெறுவதாக இருந்த, விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கண்ணப்பா’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவும் ரத்தானது.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் புதுப் படங்கள் முன்பே அறிவித்தபடி வெளியாகின.