தனது படங்கள் உரிய தேதியில் வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்டதால் கவலையில் மூழ்கி உள்ளார் நடிகை கிருத்தி ஷெட்டி.
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், தமிழில் தற்போது ‘வா வாத்தியார்’, ‘எல்ஐகே’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ளாராம்.
‘வா வாத்தியார்’ திரைப்படம் இந்த மாதம் வெளியீடு காண இருந்த நிலையில், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு காரணமாக அதன் வெளியீடு தாமதம் ஏற்படுவதால் பட நாயகன் கார்த்தி ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’எல்ஐகே’ படத்தின் வெளியீடும் தள்ளிப் போய் உள்ளது. இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருந்தாராம் கிருத்தி.
‘எல்ஐகே’ படமும் இந்த மாதம் வெளியீடு காண இருந்தது. கிருத்தி ஷெட்டி தெலுங்கில் நடித்த ‘கஷ்டரி’, ‘வாரியர்’ ஆகிய இரு படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டாலும் வெற்றி பெறவில்லை.

