மோசடி வழக்கில் மீண்டும் கைதாகி உள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
தனது தொடர்புகளின் மூலம் ரூ.1,000 கோடியைக் கடனாகப் பெற்றுத் தருவதாக டெல்லி தொழிலதிபரிடம் பேசி, மூளைச்சலவை செய்து, அதற்காக அவரிடம் இருந்து ரூ.5 கோடியை கமிஷனாகப் பெற்றுள்ளார் பவர் ஸ்டார்.
சொன்னபடி கடன் பெற்றுத்தரவில்லை என்பதுடன், ரூ.5 கோடியையும் செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே இருமுறை குற்றவாளி என அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தில் முறையாக முன்னிலையாகாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் வைத்து பவர் ஸ்டார் சீனிவாசனை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
இவர் மீது ஏற்கெனவே வேறுசில மோசடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக ஏற்கெனவே சிறைக்குச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

