ஜப்பான் ரசிகர்களைச் சந்திக்கும் பிரபாஸ்

1 mins read
17e88bc3-863a-45b3-b058-263da1ef6632
பிரபாஸ். - படம்: ஊடகம்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான ‘பாகுபலி தி எபிக்’ படத்தை, ஜப்பானில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் படத்தின் நாயகன் பிரபாஸ்.

கடந்த முறை ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ஜப்பான் சென்றபோது தன் ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவர் மனத்தில் இன்னும் உள்ளதாம். எனவே, இம்முறை ரசிகர்களைச் சந்திக்க விரிவான திட்டங்களை தீட்டியுள்ளதாகத் தகவல்.

இதனிடையே, தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் பிரபாஸ்.

அவர் ஊர் திரும்பியதும்தான் படப்பிடிப்பு தொடங்குமாம்.

குறிப்புச் சொற்கள்