பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி தெலுங்கு நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்திருக்கும் தகவல் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
‘சலார்’, ‘கல்கி 2898 AD’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு அவர் இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அதிக பிரபலமான முதல் 10 நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் 2வது இடம்பிடித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடைசியாக ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. விஜய்யின் அடுத்த படமான ‘தி கோட்’ செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவர உள்ளது.
ஷாருக்கான் 3வது இடத்திலும் மகேஷ் பாபு 4வது இடத்திலும் ஜூனியர் என்டிஆர் 5வதாகவும் 6வதாக அக்ஷய் குமாரும் 7வதாக அல்லு அர்ஜுனும் 8வதாக சல்மான் கானும் ராம் சரண் 9வது இடத்திலும் அஜித் குமார் 10வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.