சாம் ரொட்ரிகஸ் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. அதற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
நடிகர் பிரபு தேவா, வடிவேலு இணைந்து ‘காதலன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘காதலா காதலா’, ‘மனதை திருடி விட்டாய்’, ‘எங்கள் அண்ணா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
இதில் ‘மனதை திருடி விட்டாய்’ திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்தப் படத்தில் நடிகர் பிரபு தேவா, வடிவேலு, விவேக், கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
இதில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் வெற்றி பெற்றன. விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் கூட்டணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். நம் அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் இன்ஸ்டகிராமில் நகைச்சுவை ‘மீம் டெம்ப்லேட்டுகளாக’ வலம் வந்து கொண்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலுவும் பிரபு தேவாவும் இணைந்து நடித்திருந்தனர்.