கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பிரதீப்

கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பிரதீப்

1 mins read
f127011e-7168-420d-9f3f-c08342b36942
பிரதீப் ரங்கநாதன். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

படப்பிடிப்பு இல்லாத நாள்களில் கூடுமானவரை கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, மாணவர்களுடன் கலந்துரையாடுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அப்போது சில அறிவுரைகளை வழங்க அவர் தவறுவதில்லை.

“ஒரு பெண் மீது காதல் வயப்பட்டால் உடனடியாக அந்த பெண்ணிடம் அதை தெரியப்படுத்துங்கள்.

அந்தப் பெண்ணிற்கு என்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

“காதல் கைகூடி வந்தால் சந்தோஷம். இல்லையென்றால் சமாதானம்,” என்பதுதான் பிரதீப் கூறும் அறிவுரைகளில் முதன்மையானது.

எதையுமே கேட்காமல் அமைதியாக இருந்தால், கிடைக்க வேண்டிய காதலி கிடைக்காமல் போக நாமே காரணமாகி விடுவோம் என்பதையும் தவறாமல் சொல்லி விடுவாராம்.

இதனால் பிரதீப்புக்கான ரசிகர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகர்இயக்குநர்கல்லூரிமாணவர்கள்