மீண்டும் இணையும் பிரதீப், மமிதா

மீண்டும் இணையும் பிரதீப், மமிதா

1 mins read
847b8b1c-7ef8-46c0-8058-3f22d11392ec
டியூட் படத்தில் ஒரு காட்சி. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

‘டியூட்’ படத்தின் வெற்றியை அடுத்து, பிரதீப் ரங்கநாதனும் மமிதா பைஜுவும் மீண்டும் ஜோடிசேர உள்ளனர்.

‘லவ் டுடே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமான பிரதீப், பின்னர் ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்திருந்தார். மூன்று படங்களுமே நூறு கோடி ரூபாய் வசூல்கண்டு சாதனை படைத்தன.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ்’ கம்பெனி (எல்ஐகே) என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் பிரதீப். இது விரைவில் வெளியீடு காண உள்ளது.

இதையடுத்து, தம்மிடம் இணை இயக்குநராக உள்ள ஒருவரை வைத்துப் படம் தயாரிக்க உள்ளாராம் பிரதீப். இதில் அவர்தான் நாயகன் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பிரதீப்பும் மமிதாவும் மீண்டும் இணைய உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்