பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கவிருக்கிறது. இதில் மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
பொதுவாகவே, பிரதீப் ரங்கநாதன் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெறுகிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்களும் மக்களால் பெரிதும் பேசப்படுகின்றன. அதனால், அவரின் அடுத்த படத்தில் நடிக்கப் பலரும் ஆர்வமாக இருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீலீலாவுக்குக் கிடைத்துள்ளது.
மேலும், விரைவில் வெளியாகவுள்ள பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே.’ திரைப்படத்தில் கிரித்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இவரின் கதாநாயகிகள் தேர்வு, பல கதாநாயகர்களைப் பொறாமை கொள்ளச் செய்துள்ளது.
“கதாநாயகிகளைத் தேர்ந்தெடுப்பதில் பிரதீப் ரங்கநாதன் மிகவும் சாமர்த்தியசாலி. அதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது,” என்று சக நடிகர்கள் பாராட்டுகிறார்கள்.

