தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

1 mins read
8502a7c7-2d59-40e8-9dd3-d70af0bd94c3
நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன். - படம்: ஊடகம்

‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, மீண்டும் படமொன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அறிவியல் பாணியில் இப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். விரைவில் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

முன்னதாக ‘லவ் டூடே’ படத்தினை இயக்கி நாயகனாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வந்தார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்