தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘தேவரா’படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பல இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகின. ‘ஃபியர் சாங்’, ‘சுத்தமல்லி’ தலைப்பில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தாவூதி’ பாடல் காணொளியாக வெளியாகியது. தமிழ் மொழியில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
துள்ளல் இசையுடன் ஜூனியர் என்டிஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு கொடுத்துள்ளனர். இது தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.
இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

